search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து சரிவு"

    மேட்டூர் அணைக்கு நேற்று 28 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16 கன அடியாக சரிந்தது. #MetturDam

    சேலம்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 28 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 53.24 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 53.09 அடியாக இருந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

    நேற்று 117 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 116 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 117 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 116 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 82.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் சரிந்து 81.2 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து சரிந்து 5 ஆயிரத்து 747 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று 100.01 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்றும் 100 அடியாக நீடித்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

    கடந்த 30-ந் தேதி 2 ஆயிரத்து 538 கன அடியாக இருந்த நீர்வரத்து 9-ந் தேதி 5 ஆயிரத்து 244 கன அடியாக அதிகரித்தது. நேற்று 6 ஆயிரத்து 38 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து சரிந்து 5 ஆயிரத்து 747 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் ஒரே அளவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் அதே அளவில் நீடிக்கிறது. நேற்று 100.01 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றும் 100 அடியாக நீடித்தது. #MetturDam
    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருகிறது. #MullaPeriyar #PeriyarDam
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 142 அடி வரை எட்டியது. இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிகுறி இன்னும் தென்படாததால் தொடர்ந்து நீர்வரத்து குறைந்துகொண்டே வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.65 அடியாக உள்ளது. அணைக்கு 767 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் நீர்மட்டம் 69 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு வந்த 2220 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5571 மி. கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.35 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 90 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.25 அடி. அணைக்கு வரும் 30 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.  #MullaPeriyar #PeriyarDam

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 5,600 கன அடியாக வந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Hogenakkal

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். #Hogenakkal

    மேட்டூர அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 14 ஆயிரத்து 232 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த 19-ந் தேதி 24 ஆயிரத்து 764 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர், படிப்படியாக குறைய தொடங்கியது.

    நேற்று 17ஆயிரத்து 994 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் குறைந்து 14ஆயிரத்து 232 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் பாசனத்திற்காக 13ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 105.20 அடியாக உயர்ந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. #MetturDam
    சேலம்:

    கடந்த 13-ந் தேதி 13ஆயிரத்து 47 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 7ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 6 ஆயிரத்து 191 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 13ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று 103.82 அடியாக இருந்து மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.35 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,200 கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 6,200 கனஅடியாக குறைந்தது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

    மெயின் அருவி, சினி சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் குளித்து விட்டு சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 12,500 கனஅடியாக இருந்தது.

    தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று சற்று சரிந்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநிலத்திலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டறாம் பாளையம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று சற்று சரிந்து நீர்வரத்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 7 கனஅடியாக வந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 6,700ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    இதையடுத்து பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஒகேனக்கல்லில் மீன் விற்பனை குறைந்தது.
    ×